தமிழ் முகில்

Monday, July 25, 2005

ஒரு ரகசிய ரிப்போர்ட்!

சென்ற வாரம் சென்னையே அல்லோகலகல்லோகல பட்டுவிட்டது. இன்னா மேட்டருன்னு கேக்கறீங்களா... இந்தியாவின் ஒண்ணாம் நம்பர் ஜோதிடத் திலகர், நம்பர் ஒன் வாஸ்து வல்லுனர், முதல் எண் நியூமராலஜி நிபுணர், டாப் மோஸ்ட் அதிர்ஷ்டக் கல் வித்தகர் (மொத்தம் நாலு பேரான்னு கேக்காதீங்க, எல்லாம் ஒரே ஆளுதான்) திருதிரு. சுப@ஸ்வரா99லிங்கர்+3 (நியூமராலஜி, நேமாலஜி, பயாலஜிப்படி பேரை இப்படி ரிப்பேர் பண்ணி மாத்தியிருக்காருங்கோ!) -மேலும் வாசிக்க - க்ளிக்குக - லொள்ளு தர்பார் - ஜோதிடரை மொய்த்த பிரபலங்கள் - ஒரு ரகசிய ரிப்போர்ட்!

Saturday, July 23, 2005

இது.... பாட்டு!

"ஆறரை கோடி பேர்களில் ஒருவன்
அடியேன் தமிழன்
நான் உங்கள் நண்பன்

'அ'னா நீங்கள், 'ஆ'வன்னா நான்தான்!
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை.

நாம் இருவரும் இணையும் சமயம்
நம் கைகளிலே வரும் இமயம்
.......................................அமையும்
இது அன்பால் இணைந்த இதயம்

என் அன்பே... ஆருயிரே...
என் அன்பே.. ஆருயிர் நீயே!"
Image hosted by Photobucket.com
சமீபத்தில் ரிலீஸ் ஆகியிருக்கும் BF... மன்னிக்கவும்.. 'அஆ' பட பாடல் வரிகள்தான் இவை. பக்கா 'எம்.ஜி.ஆர்.' ஸ்டைல் பாடல், ஆனால் டிஜிட்டல் இசையில்! வாலியின் வரிகள்... ரஹ்மான் குரல்... எஸ்.ஜே. சூர்யாவுக்கு! (......... இட்ட வரிகள் புரியவில்லை. புரிந்தவர்கள் சொல்லவும்.)

கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. இதே பாடல் விஜயகாந்துக்கு கிடைத்திருந்தால் அவர் இதை தன் கட்சி பிரச்சாரப் பாடலாகக்கூட உபயோகிக்கலாம். அது சரி... 'ஆறரை கோடி பேர்களில் ஒருவன்.... அடியேன் தமிழன்...' இந்த வரிகள் யாருக்காகவோ ஸ்பெஷலாக எழுதப்பட்ட மாதிரி தெரிகிறதே! மருத்துவர் அய்யா, உங்களுக்கு புரிகிறதா!

Monday, July 18, 2005

நமீதா குண்டாகிக் கொண்டே போகிறாரே?!!

வாரவாரம் ஒண்ணாம் நம்பர் வார இதழ்களில் வரும் 'ஜொள்' மேட்டர்னு தப்புக் கணக்கு போட்டுடாதீங்க! இது இந்த வார தினமணிக் கதிரில் 'லொள்ளு தர்பாரு'க்காக நான் எழுதிய கட்டுரை.(?!) ...ம்ம், ஓ. கே. கட்டுரைன்னே வைச்சுக்கலாம். ஜாலி கேள்விகள் , கில்லி பதில்கள் கொண்ட துள்ளல் பகுதி - (ச்சும்மா ஒரு வெளம்பரம்....)

Wednesday, July 13, 2005

செல்போன்ல பேசலாமா!?!

எப்போ, எங்க செல்லுல பேசலாம்? இதென்ன வெட்டிக் கேள்வின்னு வீணா நெனைக்காம, தானா கொஞ்சம் யோசிங்க! சும்மா இருக்கறப்ப, சாப்பிடறப்ப, தூங்கறப்ப, பல்தேய்க்கறப்ப, பாக்கு மென்னுறப்ப, பாத்ரூம்ல வைச்சு, டெலிபோன்ல பேசறப்ப, புக் படிக்கறப்ப, பாட்டு கேட்கறப்ப, மொட்டை மாடியில, கட்டைச்சுவத்துல உட்கார்ந்து, டிரெயின்ல, பஸ்ல, படிக்கட்டுல, பட்டிக்காட்டுல இப்படி எப்ப வேணும்னாலும், எங்க வேணும்னாலும் பேசலாம்.
சரி... யாரெல்லாம் செல்லுல பேசலாம்? இதென்ன கேணத்தனமான கேள்வின்னு நெனைக்காதீங்க! செல் இருந்தா, வொர்க் ஆனா, நெட்வொர்க் இருந்தா, கெழவன், கெழவி, கொமரன், கொமரி, இளைஞன், இளைஞி, பொடிசு இப்படி யாரு வேணும்னாலும் பேசலாம்.
Image hosted by Photobucket.com

ஓ.கே. வண்டி ஓட்டுறப்போ செல்... தப்புதான். டூவிலர் ஓட்டுறப்போ செல் பேசுறதே ரிஸ்க். அதுவும் ஃபோர் வீலர்(க்கும் மேற்பட்ட Å¡¸Éõ) ஓட்டுறவர், அதுலயும் அரசுப் பேருந்து ஓட்டுனர், செல் பேசிட்டே போனா தப்புதானே! பஸ்சுக்குள்ள, வெளிய இப்படி பல உயிர்கள் அவர் கையில் இருக்கறப்போ, அவர் கையில் செல்லையும், வாயில சொல்லையும், வைச்சுக்கிட்டு 'தில்'லா பஸ் ஓட்டினா, அது நல்லதுக்கில்ல. (கண்ணால் கண்ட காட்சி : ஜூலை 12 - மாலை 6.56 - சென்னை லஸ் கார்னர் - 12G பேருந்து - எண் - TN 01 - N 2407 என ஞாபகம்.)

அந்த ஓட்டுனரும் காலத்தின் கட்டாயத்தில செல்லுக்கு சொந்தக்காரரா மாறியிருப்பாரு. அப்புறம் போக்குவரத்து கழகத்துல வேலை பார்த்துக்கிட்டிருக்கற அவருக்கும் எஸ்.எம்.எஸ். போக்குவரத்து ஆரம்பிச்சிருக்கும். கேர்ள் ப்ரெண்ட்ஸ் கிடைச்சிருக்கலாம். ரோமிங் ப்ரீயா இருக்கலாம். அந்த நெனைப்புல பஸ்சை ப்ரீ ரோமிங்ல ரோட்டுல ஓட்டுனார்னா என்ன ஆகுறது... திடீர்னு 'ஐ லவ் யூ'ன்னு கேர்ள் ப்ரெண்ட் செல்லுல சொல்லிட்டா, அவ்வளவுதான் மிதக்க ஆரம்பிச்சுடுவாரு... (அப்புறமா நாமளும் மிதக்க வேண்டியதுதான்!) அவசரமா ஒரு செய்தி கூட வரலாம். அதுக்காக இருக்கிற டிராபிக்ல வண்டியை ஓரம் கட்டியும் பேச முடியாது... நாம டென்ஷன் ஆயிட மாட்டோம். ஓ.கே. இதுக்கு என்னதான் தீர்வுன்னு கேட்கறீங்களா! அந்நியனெல்லாம் அவதரிக்க வேண்டாம். டிராபிக் ரூல்சை எல்லாருக்கும் பொதுவா செல் போனுக்கு எதிரா கடுமையா கொண்டு வரணும். என்ன நாஞ்சொல்றது!

இதை வள்ளுவர் இன்னிக்கு இருந்தா இப்படித்தான் சொல்லியிருப்பாரு....

'செல்'இடத்துக் காப்பான் incomingகாப்பான்; outgoingஇடத்துக்
காக்கில்என் காவாக்கால் என்?

Monday, July 11, 2005

கிரஹாம்பெல்லாய நமஹ!

இதோ இந்த நிமிடம் கூட அந்த சம்பவம் எங்கேயாவது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். யாரோ ஒருவர், யாரோ ஒருவருக்காக அந்த செயலை செய்து கொண்டுதான் இருப்பார்.
Image hosted by Photobucket.comஆம், தொலைத் தொடர்பின் வசதி இப்படி ஒரு தொல்லையைக் கொண்டுவருமென கிரஹாம் பெல்லே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். என்ன ரொம்ப சீரியசாப் போகுதா... ச்ச்ச்சும்மா! இந்த வாரம்
தினமணிக்கதிரில் 'வெட்டியா இருந்தா டயல் பண்ணு'-
இதுதான் நான் எழுதிய கட்டுரையின் தலைப்பு. விசயம் என்னன்னு கேட்கறீங்களா... சுட்டியைத் தட்டி படிச்சுக்கோங்க!

Monday, July 04, 2005

கதவை மூடு! கடன்காரன் போகட்டும்...

என்ன இந்த வாசகத்தை எங்கேயோ உல்டாவாக கேட்ட மாதிரி உள்ளதா... கேட்டிருக்கலாம்... பார்த்திருக்கலாம்... படித்திருக்கலாம்... நேற்று முதல் தினமணிக் கதிரில் எழுத ஆரம்பித்துள்ளேன். 'லொள்ளு தர்பார்' - இதுதான் அந்தப் பகுதியின் பெயர். வாசித்துப் பாருங்கள். அந்த சிலர் மேல் 'பக்தி' உடையவராக நீங்கள் இருந்தால், வாசிக்கும்போது உங்களுக்கு கட்டாயம் கோபம் வரும். ஆனால் வரக்கூடாது... அதுதானே மனவளக்கலை. சம்பந்தப்பட்டவர்களும் கண்டிப்பாக கோபித்துக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் 'சாமி'. ..ம், உங்கள் மனதை திறந்து வைத்துக் கொண்டு படிங்க.. சிரிங்க!