தமிழ் முகில்

Monday, October 10, 2005

கிளினிக் கிச்சு! கிச்சு!

ஹலோ நேயர்களே! வெல்கம் டூ லொள்ளு டீவியின் 'கிளினிக் கிச்சு! கிச்சு!'. நேயர்களின் உடல் நலம், மனநலம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு உயிரோட்டமுள்ள பதில்களை அளிக்கிறார் இந்தியாவின் நெம்பர் (நைன்ட்டி) ஒன் டாக்டர் மைக்கேல் மதன காமராஜ்! டாக்டரைப் பற்றிய ஒரு சிறுகுறிப்பு - இவர் வெறும் டாக்டரல்ல. ஏ டூ இஸட் எல்லாவித மருத்துவமும் தெரிந்த ல்-இன்-ல் டாக்டர். ஹோமியோபதி டூ சீதபேதி, யுனானி டூ அம்பானி, சித்த மருத்துவம் டூ செத்த மருத்துவம், சைக்காலஜி டூ லேடீஸ்காலேஜி என இவருக்கு தெரியாத மருந்து வகைகள் எதிலுமே கிடையாது. இவர் சென்ற மாதம்தான் பான்பராக் பல்கலைக்கழகத்தில் 'டாக்டர்' பட்டம் 'வாங்கி' வைத்தியரானார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி நோய்களை ஓட ஓட விரட்ட வைக்க டாக்டரே உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பார். இந்த வார லொள்ளு தர்பார்...

Thursday, October 06, 2005

'சிவாஜி' - ஓப்பனிங் ஸீன்!

தீப்பிடிக்க தீப்பிடிக்க ஒரு ஸீன் டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்கிறது. இடம் கேளம்பாக்கம் பண்ணை வீடு! படம்?!... 'சிவாஜி'. பரபர டிஸ்கஷனில் படபடவென பேசும் சூப்பர் ஸ்டார், மடமடவென ஷூட்டிங் நடத்தும்(?!) டைரக்டர் ஷங்கர், கடகடவென கவிதை கட்டும் வைரமுத்து, வளவளவென வாயளக்கும் வடிவேலு, 'தளபதி'யின் தளபதி சத்ய நாராயணா! ஓ.கே. மீட்டர் போட்டாச்சு! மேட்டருக்குப் போகலாம்!