தமிழ் முகில்

Wednesday, July 13, 2005

செல்போன்ல பேசலாமா!?!

எப்போ, எங்க செல்லுல பேசலாம்? இதென்ன வெட்டிக் கேள்வின்னு வீணா நெனைக்காம, தானா கொஞ்சம் யோசிங்க! சும்மா இருக்கறப்ப, சாப்பிடறப்ப, தூங்கறப்ப, பல்தேய்க்கறப்ப, பாக்கு மென்னுறப்ப, பாத்ரூம்ல வைச்சு, டெலிபோன்ல பேசறப்ப, புக் படிக்கறப்ப, பாட்டு கேட்கறப்ப, மொட்டை மாடியில, கட்டைச்சுவத்துல உட்கார்ந்து, டிரெயின்ல, பஸ்ல, படிக்கட்டுல, பட்டிக்காட்டுல இப்படி எப்ப வேணும்னாலும், எங்க வேணும்னாலும் பேசலாம்.
சரி... யாரெல்லாம் செல்லுல பேசலாம்? இதென்ன கேணத்தனமான கேள்வின்னு நெனைக்காதீங்க! செல் இருந்தா, வொர்க் ஆனா, நெட்வொர்க் இருந்தா, கெழவன், கெழவி, கொமரன், கொமரி, இளைஞன், இளைஞி, பொடிசு இப்படி யாரு வேணும்னாலும் பேசலாம்.
Image hosted by Photobucket.com

ஓ.கே. வண்டி ஓட்டுறப்போ செல்... தப்புதான். டூவிலர் ஓட்டுறப்போ செல் பேசுறதே ரிஸ்க். அதுவும் ஃபோர் வீலர்(க்கும் மேற்பட்ட Å¡¸Éõ) ஓட்டுறவர், அதுலயும் அரசுப் பேருந்து ஓட்டுனர், செல் பேசிட்டே போனா தப்புதானே! பஸ்சுக்குள்ள, வெளிய இப்படி பல உயிர்கள் அவர் கையில் இருக்கறப்போ, அவர் கையில் செல்லையும், வாயில சொல்லையும், வைச்சுக்கிட்டு 'தில்'லா பஸ் ஓட்டினா, அது நல்லதுக்கில்ல. (கண்ணால் கண்ட காட்சி : ஜூலை 12 - மாலை 6.56 - சென்னை லஸ் கார்னர் - 12G பேருந்து - எண் - TN 01 - N 2407 என ஞாபகம்.)

அந்த ஓட்டுனரும் காலத்தின் கட்டாயத்தில செல்லுக்கு சொந்தக்காரரா மாறியிருப்பாரு. அப்புறம் போக்குவரத்து கழகத்துல வேலை பார்த்துக்கிட்டிருக்கற அவருக்கும் எஸ்.எம்.எஸ். போக்குவரத்து ஆரம்பிச்சிருக்கும். கேர்ள் ப்ரெண்ட்ஸ் கிடைச்சிருக்கலாம். ரோமிங் ப்ரீயா இருக்கலாம். அந்த நெனைப்புல பஸ்சை ப்ரீ ரோமிங்ல ரோட்டுல ஓட்டுனார்னா என்ன ஆகுறது... திடீர்னு 'ஐ லவ் யூ'ன்னு கேர்ள் ப்ரெண்ட் செல்லுல சொல்லிட்டா, அவ்வளவுதான் மிதக்க ஆரம்பிச்சுடுவாரு... (அப்புறமா நாமளும் மிதக்க வேண்டியதுதான்!) அவசரமா ஒரு செய்தி கூட வரலாம். அதுக்காக இருக்கிற டிராபிக்ல வண்டியை ஓரம் கட்டியும் பேச முடியாது... நாம டென்ஷன் ஆயிட மாட்டோம். ஓ.கே. இதுக்கு என்னதான் தீர்வுன்னு கேட்கறீங்களா! அந்நியனெல்லாம் அவதரிக்க வேண்டாம். டிராபிக் ரூல்சை எல்லாருக்கும் பொதுவா செல் போனுக்கு எதிரா கடுமையா கொண்டு வரணும். என்ன நாஞ்சொல்றது!

இதை வள்ளுவர் இன்னிக்கு இருந்தா இப்படித்தான் சொல்லியிருப்பாரு....

'செல்'இடத்துக் காப்பான் incomingகாப்பான்; outgoingஇடத்துக்
காக்கில்என் காவாக்கால் என்?

4 Comments:

Post a Comment

<< Home