தமிழ் முகில்

Wednesday, June 08, 2005

டயானாவும், உலகமயமாக்கலும்!

கேள்வி: உலகமயமாக்கலின் உச்சம் எது?

பதில்: டயானாவின் மரணம்!

Image hosted by Photobucket.com

கேள்வி: எப்படி?

பதில்: இங்கிலாந்து இளவரசி டயானா, தன் எகிப்திய ஆண் நண்பரோடு, ஒரு
ப்ரெஞ்ச் சுரங்கப் பாதையில் விபத்தைச் சந்தித்தார். அவர் சென்றது ஜெர்மன் கார். அதில் இயங்கியது டட்ச் இஞ்ஜின். பெல்ஜியத்தைச் சேர்ந்த அந்த ஓட்டுனர் அருந்தியிருந்தது ஸ்காட்ச் விஸ்கி. அவர்களை தன் ஜப்பானிய மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்றவர் ஒரு இத்தாலிய பப்பாரஸி. விபத்தில் சிகிச்சை செய்தவர் ஒரு அமெரிக்க டாக்டர். உபயோகித்தது மருந்துகள் பிரேசிலில் இருந்து வரவழைக்கப்பட்டவை. இதை இப்போது உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கும் நான் ஒரு இந்தியன், உபயோகிப்பது பில்கேட்சின் தொழில் நுட்பத்தை. நீங்கள் இதை உங்கள் IBM சிஸ்டத்தில் வாசித்துக் கொண்டிருக்கலாம். அந்த சிஸ்டத்தில் இருப்பது தாய்வானில் உருவாக்கப்பட்ட சிப்ஸ், கொரியாவில் தயாரிக்கப்பட்ட மானிட்டர்கள், அதைக் கட்டமைத்தவர்கள் பங்களாதேஷ்காரர்கள், தொழிற்சாலை உள்ள இடம் சிங்கப்பூர். இவை இந்திய லாரி டிரைவர்களால் டிரான்ஸ்போர்ட் செய்யப்பட்டு, பாகிஸ்தானியர்களால் கடத்தப்பட்டு, இறுதியில் சைனாக்காரர்களால் உங்களுக்கு விற்கப்பட்டிருக்கும்.

இதுதான் உலகமயமாக்கல்!!!

(எனக்கு வந்த Fwd: மெயிலின் தமிழாக்கம்!)

5 Comments:

  • நல்ல பதிவு. இந்த மாதிரி இன்Fர்மேடிவாக நிறைய எழுதுங்கள் முகில்...

    By Blogger R.Vijay, at Wednesday, June 08, 2005 1:55:00 pm  

  • நீங்க இதை சென்னையில் அமர்ந்து பதிக்க அமெரிக்காவிலும் அமர்ந்து படிக்கலாம் இதுகூட உலக மயமாக்கல்தான்...

    By Blogger ப்ரியன், at Wednesday, June 08, 2005 2:08:00 pm  

  • கமெண்டு போட்ட திரு. ஆர். விஜய் அவர்களே,

    நல்ல பதிவு, ரொம்ப நல்ல பதிவு என்று பிளேடு போடாதீர்கள். உருப்படியாக சொல்வதற்கு ஏதாவது இருந்தால் சொல்லவும். இல்லாவிட்டால் மூடிக்கொண்டு சும்மா இருக்கவும்.

    By Anonymous Anonymous, at Wednesday, June 08, 2005 3:32:00 pm  

  • குட்டிகோயிஞ்சாமி அவர்களே,
    தங்களுக்கு பாராட்ட மனம் வராது என்பது எனக்கு தெரியும்...
    ஏனென்றால் குற்றம் கூரியே பெயர் (வாங்குமல்ல) போகும் நவீன நக்கீரராயிற்றே..

    By Blogger R.Vijay, at Wednesday, June 08, 2005 3:40:00 pm  

  • what font to be installed to view this site?

    RB Rajkumar

    By Anonymous Anonymous, at Wednesday, June 29, 2005 9:02:00 am  

Post a Comment

<< Home