fwd மெயில் : கோமாளித்தனங்கள்!
"அந்தப் புகைப்படத்தை பார்த்தீர்களா? என்ன 'திகில்' கொடுப்பதாக உள்ளதா! கட்டிலுக்கு அடியில் இருப்பது விபத்தில் செத்த ஒரு இளம் பெண்! கட்டிலின் மேலே இருப்பது விபத்திற்கு காரணமானவன். இப்போது இந்த திகில் பெண் வெறியோடு அலைந்து கொண்டிருக்கிறாள். அவளிடமிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டுமா... உடனே இந்தப் புகைப்படத்தை 5 பேருக்கு மெயிலில் அனுப்புங்கள். இல்லையேல் இன்று இரவே அந்தப் பெண் உங்கள் உயிரை அபகரிக்க வந்து விடுவாள். ஆம்.. இது நிஜம்! சிட்னியில், லாஸ் ஏஞ்சல்ஸில், டெக்ஸாசில் இந்தப் புகைப்படத்தை 5 பேருக்கு அனுப்பாமல் அலட்சியமாக delete செய்த சிலர் இப்போது இல்லை. ஆம் இது நிஜம்! ஜாக்கிரதை!!!"

- இது எனக்கு இன்று வந்த fwd: மெயில். (அனுப்பிய பைத்தியக்காரன் - மேலும் 4 பேருக்கு அனுப்பியிருந்தான்.)
முன்பு, (இப்பொழுதும் இருக்கும் என நினைக்கிறேன்) "இந்த நோட்டீஸை கண்டெடுப்பவர்கள் - இதே போல் 1000 நோட்டீஸ் அடித்து விநியோகிக்க வேண்டும். செய்தால் 'மங்களம்' உண்டாகும். இல்லாவிட்டால் தீயவை உங்கள் வாழ்வில் நேரும்" என கீழே பிரிண்டிங் பிரஸ் முகவரியுடன் தெளிவாக கொடுத்திருப்பார்கள். அந்த கலாச்சாரம்(!) இப்போது அப்-டேட்டாகி, இப்படி மெயில், மெயிலா மேய்ஞ்சுகிட்டு இருக்கு! பொதுவா இப்படி fwd: ஆகி வருகிற மெயில்களோட ஆணிவேர் ஏதாவது பிரபல 'சாஃப்ட்வேர்' கம்பெனியோட மெயில் ஐடியாத்தான் இருக்குது! ..ம், இவங்களைத் திருத்தணும்னா பெரியாரைத்தான் பிராஜக்ட் லீடராப் போடணும்!
ஒரே வரியில சொல்லணும்னா

- இது எனக்கு இன்று வந்த fwd: மெயில். (அனுப்பிய பைத்தியக்காரன் - மேலும் 4 பேருக்கு அனுப்பியிருந்தான்.)
முன்பு, (இப்பொழுதும் இருக்கும் என நினைக்கிறேன்) "இந்த நோட்டீஸை கண்டெடுப்பவர்கள் - இதே போல் 1000 நோட்டீஸ் அடித்து விநியோகிக்க வேண்டும். செய்தால் 'மங்களம்' உண்டாகும். இல்லாவிட்டால் தீயவை உங்கள் வாழ்வில் நேரும்" என கீழே பிரிண்டிங் பிரஸ் முகவரியுடன் தெளிவாக கொடுத்திருப்பார்கள். அந்த கலாச்சாரம்(!) இப்போது அப்-டேட்டாகி, இப்படி மெயில், மெயிலா மேய்ஞ்சுகிட்டு இருக்கு! பொதுவா இப்படி fwd: ஆகி வருகிற மெயில்களோட ஆணிவேர் ஏதாவது பிரபல 'சாஃப்ட்வேர்' கம்பெனியோட மெயில் ஐடியாத்தான் இருக்குது! ..ம், இவங்களைத் திருத்தணும்னா பெரியாரைத்தான் பிராஜக்ட் லீடராப் போடணும்!
ஒரே வரியில சொல்லணும்னா
'மூட நம்பிக்கைகள் நவீனமாகிக் கொண்டு வருகின்றன!'
10 Comments:
Naveena mayamaakum Mooda nambikaikal - Nalla sinthani
By
Anonymous, at Friday, June 24, 2005 5:36:00 pm
Sinthika vendiya vishayam! Vudanadiyaga intha blog contents copy-paste seithu 17 perukku CC pottu anupinal anthamanukku ticket kidaikum. vudanadiyaga seyyavaum!San Franciscovil oruvar ippadi seithu ippozuthu anthaman poy vittar. Seekaram anuppavam !
By
Anonymous, at Friday, June 24, 2005 5:47:00 pm
இப்படி Fwd: மெயில் அனுப்புபவர்களின் நோக்கம் மெயில் ஐடிக்களை தொக்குத்து ஸ்பேம் மெயில்களை அனுப்புவதுதான் என எங்கோ நான் படித்ததாய் நினைவிருக்கிறது.
இப்படி பட்ட மெயில்களை எனக்கு Fwd செய்த நண்பர்களை திட்டி கெஞ்சி பார்த்துவிட்டேன் திருந்துவதாய் இல்லை அவரகள்...இன்றைக்கு கூட காலையிலிருந்து 3 மெயில்கள் இந்த வகையில்...
எல்லாரையும் அந்த ஆண்டவன் தான் திருத்தனும்
By
ப்ரியன், at Friday, June 24, 2005 5:56:00 pm
இப்பிடித்தான் சுனாமியால மெரீனா கடற்கரையல் ஒதுங்கிய கடற்கன்னி என்ற பெயரில் எனக்கு fwd மெயிலில் வந்ததை இந்த இணைப்பில பார்க்கலாம்.
http://urbanlegends.about.com/library/bl_mermaid_tsunami.htm
By
சினேகிதி, at Friday, June 24, 2005 7:26:00 pm
இந்த மாதிரி மெயில்களோ குறுந்தகவல்களோ வந்தால் நான் செய்யும் முதற் காரியம் அவற்றை அழிப்பதுதான். பழநி முருகனிலிருந்து திருப்பதி வெங்கடாஜலபதி வரை எல்லாரையும் பயமுறுத்துகிறார்கள். பைத்தியக்காரர்கள்.
பிறகு பத்து பேருக்கு அனுப்புங்கள் உங்களது காதல் நிறைவேறும், நல்ல நண்பன் கிடைப்பான் போன்றவைகள்.
முகிலனின் விபத்துக்குள்ளான பெண் கட்டுரை நகைச்சுவை என்றால் சினேகிதியின் கடற்கன்னிக் கட்டுரை பயங்கர நகைச்சுவை. படித்துச் சிரித்தேன்.
By
G.Ragavan, at Friday, June 24, 2005 8:10:00 pm
உங்களுக்கு வந்த இமெயில 5 பேருக்கு பதிலா 500 பேருக்கு (தமிழ்மண பதிவர்கள்) அனுப்பிட்டீங்க போலிருக்கு.. சும்மா ஜோக்குக்கு சொன்னேன்..கண்டுக்காதீங்க.
அப்பாவி
By
அப்பாவி, at Friday, June 24, 2005 10:48:00 pm
ராகவன் எனக்கு அந்த மெயிலைப் பார்த்தவுடன் பிரபுவின் ஒரு படத்தில் ஓரு கடற்கன்னி வருவாவே அதமாதிரி என்றுதான் நினைச்சேன் அப்புறமா கூகிலில் போய்த் தேடித்தான் உண்மை ஓரளவாவது புரிந்தது.
By
சினேகிதி, at Saturday, June 25, 2005 12:49:00 am
that's a good one mukil
last week, I received one, on a tweety bird.. that if I don't send it, I will meet bad luck.
By
Ram C, at Thursday, June 30, 2005 10:06:00 am
Hi,
I like your script.it`s beautiful.
By
Anonymous, at Thursday, June 30, 2005 11:09:00 am
hi mukil
it was really a good article yaar,sorry i couldnt find the site given by ragavan...really i too get so many fwd mails i wish all this stops...mukil u ve good sense of humour..good ..keep it up
subha,chennai
By
Anonymous, at Friday, July 01, 2005 5:00:00 pm
Post a Comment
<< Home