தமிழ் முகில்

Friday, June 10, 2005

ஹைய்யா! முடியப் போகுது!!

தமிழ்நாட்டில் இன்றைய தேதியில் ஏதாவதொரு தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால், நான் ஒரு வேட்பாளரை நிறுத்தத் தயாராக உள்ளேன். பெரிய தலைகள் யார் வேணும்னாலும் நிக்கட்டும், நம்மாளு சொல்லி ஜெயிப்பாரு! அவ்வளவு பவர் உள்ள ஆளு யாருன்னு கேட்கறீங்களா? அது எந்த 'காந்த்'ம் இல்ல! அவர் பெயர்... சிதம்பரம்! ஆமா, 'மெட்டி ஒலி' பாசக்கார அப்பா சிதம்பரமேதான்!
தமிழக (அனைத்து தரப்பு) மக்களின் ஆதரவு பெற்ற ஒரே வேட்பாளர் இப்போ இவர் மட்டுமே!
'போயிட்டியே... போயிட்டியே'ன்னு நைட்டு ஒன்பது மணிக்கு மேல தமிழ்நாடே 'எலவு' வீடாட்டம் மாறிடுது! இன்னும் 16 நாளைக்கு காரியம் நடக்கும்போல!
அய்யா சாமி.. இதோ மெட்டி ஒலி சீக்கிரம் முடியப் போகுதுன்னு எதோ ஒரு பத்திரிக்கையில போட்டிருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டேன். அந்த 'சீக்கிரத்தோட' அர்த்தம் மூணு, நாலு மாசம்னு எனக்கு அப்ப புரியல!
Image hosted by Photobucket.com

மெட்டியோட ஒலியே இவ்வளவு வருசத்துக்கு ஒலிக்குதுன்னா, இவங்க இந்த சீரியலுக்கு 'மேள ஒலி'ன்னு பேரு வைச்சிருந்தாங்கன்னா... அய்யா சாமி, நினைச்சுக்கூட பார்க்க முடியல!

'எதையும் தாங்கும் இதயம் கொண்ட' தமிழக மக்கள் - இனி எந்த ஒலியையும் தாங்குவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை!

(பின் குறிப்பு: நான் இதுவரை அதிகபட்சம் 50 எபிசோட்கள் மட்டுமே பார்த்துள்ளேன்)

10 Comments:

  • முகில் சேதி தெரியுமா? மெட்டி ஒலி இனிமேல்தான் முகூர்த்தத்தில் கேட்கப்போகிறது.

    By Anonymous Anonymous, at Friday, June 10, 2005 5:04:00 pm  

  • ஜீன் 17 அன்னிக்கும் முடிடிதாம் அண்ணாச்சி.18ல இருந்தாவது நல்ல சாப்பாடு கெடச்சா தேவலெ.மறுபடியும் "கொலுசு ஒலி"னு ஒன்னு வந்துபுட்டா நம்ப கதி அம்புட்டுத்தான்

    By Blogger ப்ரியன், at Friday, June 10, 2005 5:38:00 pm  

  • நீங்க சிதம்பரம் தாத்தாவை நிக்க வெச்சா ... நான் நம்ம அண்ணாமலை செல்வி அக்காவ உக்கார வெச்சி ஜெயிக்க வெப்பேன்.. :) :)

    வீ .எம்

    By Blogger வீ. எம், at Friday, June 10, 2005 5:52:00 pm  

  • // 'போயிட்டியே... போயிட்டியே'ன்னு நைட்டு ஒன்பது மணிக்கு மேல தமிழ்நாடே 'எலவு' வீடாட்டம் மாறிடுது! இன்னும் 16 நாளைக்கு காரியம் நடக்கும்போல!//

    எல்லா வீட்டு மெட்டி ஒலிக்களும் விரும்பி வீட்டுக்குள் வரவழைத்துக் கொள்ளும் ஒரு விஷயம் இது. மெட்டி அணிவிப்பதற்கு முன்னமே இதையெல்லாம் சராசரித் தமிழன் யோசித்து இத்தகைய ஆபத்துகளிலிருந்து வருமுன் காத்துக் கொள்வதில்லை (!?!)

    தெருவோரத்தில் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை காட்டுகிறேன் என்று கூட்டம் கூட்டுபவனை பார்த்திருக்கிறிர்களா? அவன் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை காட்டி நான் பார்த்தது கிடையாது. அது போலத்தான் மெட்டி ஒலி முடியப் போகிறது என்ற கதையும்.

    நல்ல வேளை "பார்க்காமல் டி வி யை நிறுத்தினாலோ அல்லது சானலை மாற்றினாலோ ரத்தம் கக்கி செத்து விடுவாய்" என்று மெட்டி ஒலிக் காரர்கள் இன்னும் மிரட்ட ஆரம்பிக்கவில்லை. இன்னும் அது ஒன்றுதான் பாக்கி!

    மெட்டி ஒலி இயக்குனர் அவரும் குழம்பி, கதாபாத்திரங்களை character கொலை செய்து கொண்டிருக்கிறார். தப்பான செய்திகளை சமூகத்திற்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்.

    அது சரி. நிஜமாவே சீக்கிரம் முடிச்சிறப் போறாங்களா!!! உண்மையா!!? மகிழ்ச்சியாய் திருப்பதிக்குப் போய் ஒரு மொட்டை போட்டுவிட்டு வரலாம் வாரியளா?

    By Blogger ந. உதயகுமார், at Friday, June 10, 2005 7:40:00 pm  

  • //அந்த 'சீக்கிரத்தோட' அர்த்தம் மூணு, நாலு மாசம்னு எனக்கு அப்ப புரியல!
    //

    நானும் ஏமாந்துவிட்டேன்

    By Blogger குழலி / Kuzhali, at Saturday, June 11, 2005 8:22:00 am  

  • முகில், நீங்க ப்ளாகில் எழுதின வேளை எங்கு பார்த்தாலும் மெட்டி ஒலி பேட்டிகள்தான்

    சாது மிரண்டால்... என்று சரோவின் பேட்டி தினமணியில்..
    பவானியின் பேட்டி குங்குமத்தில்..
    சிதம்பரத்தின் பேட்டி நக்கீரனில்...

    By Anonymous Anonymous, at Monday, June 13, 2005 9:16:00 am  

  • எக்ஸ்டிரா செய்தி:

    மெட்டி ஒலியின் இடத்தில் வரும் திங்கள் முதல் முகூர்த்தம் என்கிற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. மெட்டி ஒலியின் திரைக்கதை ஆசிரியர் சி.யு. முத்துச்செல்வன் இதனை இயக்குகிறார். முதலில் 'சுற்றமும் நட்பும்' என்று தலைப்பு வைத்திருந்தார்கள். தயாரிப்பாளர் சித்திக்கின் 'எம்' செண்டிமெண்ட் காரணமாக சுற்றமும் நட்பும், முகூர்த்தமகிவிட்டது.

    பி.கு: அடுத்து யாராவது சாந்தி முகூர்த்தம் என்று டைட்டில் ரிஜிஸ்டர் செய்திருக்கிறார்களா என்று தெரியாது.

    By Anonymous Anonymous, at Friday, June 17, 2005 10:22:00 am  

  • Aiyyo samy.
    Indha sani pona adutha sani vandhuruchu.

    kadavule ithuku vidivu kalame kidayatha ?

    By Blogger BALU = VALU, at Saturday, July 09, 2005 7:35:00 pm  

  • This comment has been removed by a blog administrator.

    By Blogger யாத்ரீகன், at Saturday, July 16, 2005 1:00:00 am  

  • //மெட்டியோட ஒலியே இவ்வளவு வருசத்துக்கு ஒலிக்குதுன்னா, இவங்க இந்த சீரியலுக்கு 'மேள ஒலி'ன்னு பேரு வைச்சிருந்தாங்கன்னா... அய்யா சாமி, நினைச்சுக்கூட பார்க்க முடியல! //


    :-)))))))))))

    meti oli-kay ipidi solreengalay.. Shakthi-nu banupriya serial onnu dhanay idhelaam arambichu vachadhu, adhu arambachidhula irundhu ipo varaikum , maalai 7 mani-la irundhu , iravu 11 mani varaikum, enga thatha-vum paati-yum vidaama thodarndhu paarthu thaluvaanga.

    Nalla vellai, enga amma-vuku indha Mega Serial-gal-la thuli kooda ishtam illa.. adhunala naanga polachom ;-)

    By Blogger யாத்ரீகன், at Saturday, July 16, 2005 1:02:00 am  

Post a Comment

<< Home