தமிழ் முகில்

Monday, August 29, 2005

இளமை இஞ்சி முட்டாய்!

மும்பை தாராவி.. அங்கேதான் அந்த இளம் பெண் சுனாமி, மேகக் கூட்டங்களோடு மேக்-அப் உடன் குடியிருக்கிறது.......வீட்டினுள் நுழைகிறோம். சுவரெங்கும் சித்திரங்கள்! எல்லாம் கருப்பு-வெள்ளை ஓவியங்கள். உள்ளிருந்து ஒன்றரை லிட்டர் மிராண்டா பாட்டில் மாதிரி வருகிறார் ருசிஷா! "இதெல்லாமே நீங்களே வரைஞ்சதா?'' ஆனந்தக் கண்ணீரோடு கேட்டோ ம்..............பக்கத்து வீட்டுக்கு போய்தான் சாமி கும்பிடுவோம்." சொல்லும்போதே ருசிஷாவின் கண்கள் மணியடிக்கிறது............"உங்களோட பேவரிட் சாமி யாரு?'' - "கிருஷ்ணசாமி''..... முழுமையாய்ப் படித்துச் சிரிக்க...
க்ளிக்குக - லொள்ளு தர்பார் - ஆகஸ்ட் 28 - நடிகை ருஷிசாவுடன் ஒரு நாள்!

Friday, August 26, 2005

த்ரிஷா - ஜாக்கிரதை!

Image hosted by Photobucket.com
த்ரிஷா நின்னா கவர்ஸ்டோரி, நடந்தா கவர்ஸ்டோரின்னு சில பத்திரிக்கைங்க பொழைச்சுக்கிட்டிருக்கு. மீடியாக்களைப் பார்த்து த்ரிஷா பயந்துகிட்டிருந்த காலம் மாறி, இப்போ 'த்ரிஷா'ன்னாலே வலை உலகமே அலறுற மாதிரி மேட்டர் ஒண்ணு நடந்துகிட்டு இருக்கு. விஷயம் என்னன்னா, 'THIRUTCHA'ங்கிற பேர்ல இப்போ மெயில் ஒண்ணு ரவுண்டு வருதாம். மெயில்ல த்ரிஷா-வை எதிர்பார்த்து தொறந்தீங்கன்னா, அவ்ளோதான். ஏன்னா அது வைரஸாம். அப்புறம் உங்க சிஸ்டத்துக்கு கஷ்டகாலம்தான். இதுல என்ன ஜோக்குன்னா, த்ரிஷாதான் வலை உலகத்துல உள்ள கோவத்தால இப்படி ஒரு வைரஸை பரப்பி விடுதுன்னு ஒரு குரூப்பு சொல்லிக்கிட்டு திரியறதுதான். எனவே இதன் மூலம் அனைவருக்கும் தெரிவிக்கப்படுவது என்னவென்றால்......

Tuesday, August 23, 2005

துப்பாக்கி மொழி - புதிய புத்தகம்!

''காஷ்மீர் தொடங்கி, தமிழகம் வரை இந்தியா முழுவதற்குமான பொதுவான பிரச்னைகள் என்று பட்டியலிட்டால் அவற்றுள் முதலாவதாக வரக்கூடியது, தீவிரவாத - பயங்கரவாத இயக்கங்கள்.சுதந்திரம் அடைந்த காலம் தொடங்கி இன்றுவரை தேசத்தின் பல்வேறு மாநிலங்களின் தலையாய தலைவலியாக இருப்பவை இந்தத் தீவிரவாத இயக்கங்கள்.

Image hosted by Photobucket.com

பிரிவினை கோரும் இந்த இயக்கங்களைப் பற்றிய செய்திகள், அவ்வப்போது குண்டுகள் வெடிக்கும்போது மட்டும் தினசரிகளில் வெளியாகும். எப்போதாவது சமரசப் பேச்சுக்கள் நடக்கும். பேச்சு முடியும் முன் மீண்டும் உயிர்ப்பலிகள் தொடங்கிவிடும்.அச்சமூட்டும் ஆள்பலம், மிரளவைக்கும் செயல்திட்டங்கள், கவலை தரத்தக்க வெளிநாட்டுத் தொடர்புகள், பண பலம், ஆயுதபலம் என்று இயங்கும் இத்தகைய இயக்கங்களைப் பற்றிய முழுமையான, விரிவான தகவல்கள் அடங்கிய நூலொன்று தமிழில வெளிவருவது இதுவே முதல் முறை.

அஸ்ஸாம் தொடங்கி, தமிழகம் வரை செயல்படும் பல்வேறு தீவிரவாத இயக்கங்களைப் பற்றிய பல நுணுக்கமான தகவல்கள் இதில் அடங்கியுள்ளன. இவை அனைத்துமே இந்திய மண்ணில் தோன்றி, இங்கேயே செயல்பட்டுக்கொண்டிருக்கும் இயக்கங்கள். இதே காரணத்தால்தான் பாகிஸ்தானில் வேர்கொண்டு செயல்படும் இயக்கங்கள் குறித்த தகவல்கள் இந்நூலில் சேர்க்கப்படவில்லை.''


- இந்தப் புத்தகத்தில் என் நண்பர்களான மருதன், இரா. முத்துக்குமார், ச. ந. கண்ணன் ஆகியோரோடு இணைந்து நானும் பணியாற்றியுள்ளேன். வெளியீடு : கிழக்குப் பதிப்பகம்.

Monday, August 22, 2005

இந்தக் கட்டுரையை உங்களுக்கு வழங்குபவர்கள்...

பல டீ.வி. நிகழ்ச்சிகளை விட சுவாரசிமான விஷயங்கள் புழங்குற வலைப்பதிவு உலகத்துக்கு இன்னும் விளம்பரதாரர்கள் ஆதரவு கொடுக்க மாட்டேங்கறாங்களேன்னு சொல்ல நான் வரலை. இந்தக் கட்டுரை டீ.வி. நிகழ்ச்சிகளை விட மனதில் பச்சக் என ஒட்டிக் கொள்ளும் விளம்பரங்களைப் பற்றியது. 10 நொடிகளில் மின்னலென கண்முன் ஓடும் ஒரு விளம்பத்தின் காட்சி நம் மனதில் பதிந்து விட்டால், அந்த விளம்பரம் சம்பந்தப்பட்ட பொருளும் நம் நினைவில் தங்கி விடும். விளம்பரங்களின் வெற்றியே அதுதான். 'சக்கைப் போடு' போட்டுக் கொண்டிருக்கும் இன்றைய விளம்பரங்களைப் பற்றிய ஒரு ஜாலியான கட்டுரைதான் இது! பார்க்க: நோபால் பல்பொடி! தேசத்தின் புன்னகை!

சூடா சமோசா...

ஒரு வாரம் கழிச்சு இந்த விஷயம் வலையில வந்திருக்கு. இருந்தாலும் பரவாயில்லை. சூடு குறையல! சுவையும் மாறல! நீங்க அப்படியே சாப்பிடலாம். 'ஸ்வீட் தாரா - மசாலா ஜூஸ்' - சென்ற வார தினமணிக் கதிர் - லொள்ளு தர்பார்!

Friday, August 12, 2005

சனிக்கிழமை புதன் வருமா!?

சனிக்கிழமை புதன் வருமா...!?
நக்கல் இல்லீங்கோ.. மெய்யாலுமே கேட்கறேன்.
ஆமா சனிக்கிழமை புதன் வரப்போகுதாம்.

Image hosted by Photobucket.com


விஷயம் என்னன்னா, வர்ற ஆகஸ்ட் 27 2005 - சனிக்கிழமை, பூமிக்கு 35 மில்லியன் மைல்கள் தொலைவில புதன் வரப்போகுதாம். ஆகஸ்ட் 27 - 00.30 மணிக்கு ஆகாயத்தைப் பாத்தீங்கன்னா, நிலாவும், புதனும் சேர்ந்து ரெண்டு நிலாவாத் தெரியுமாம். அதுலயும் புதன் கொஞ்சம் அதிகமாவே பவுடர்லாம் போட்டுக்கினு 'பளபளா'ன்னே தெரியுமாம். சாதாரண கண்ணாலே பார்க்கலாமாம். பார்க்கமா, வழக்கம்போல குறட்டை விட்டுத் தூங்கிடாதீங்க.. ஏன்னா, இதே மாதிரி சம்பவம் இதுக்கு அப்புறம் 2287ல தான் நடக்குமாம்.

எனவே மக்களே..
உலக வான்காட்சியில் (நமக்கு) முதன் முறையாக....

தவற விட்டுடாதீங்க!!!

Monday, August 08, 2005

யாரையும் குறிப்பிடுவதல்ல...!!!

'இந்தச் சுட்டியைத் தட்டி நீங்கள் படிக்கப் போகும் கட்டுரை யாரையும் எவரையும் எதையும் தழுவியோ, மருவியோ, உருவியோ, நக்கலடித்தோ எழுதப்பட்டதல்ல'ன்னு நான் மனப்பூர்வமா ஒரு வாக்குறுதியைத் தந்தாலும் நீங்க என்ன நம்பவா போறீங்க... சரி.. சரி இதைத் தட்டி படிங்க!

Wednesday, August 03, 2005

மொபைல் போன் வைரஸ்... சில தகவல்கள்!

வைரஸ் காய்ச்சல் முதலில் உயிரினங்களுக்கு மட்டும் வந்தது.
பின் கணினி மேல் கண் வைக்கத் தொடங்கியது.
இப்போது மொபைல் போன்களையும் முத்தமிட ஆரம்பித்துள்ளது.
Image hosted by Photobucket.com


ஒருநாள் அதிகாலை 2 மணி இருக்கும். சிங்கப்பூரில் இருந்து என் நண்பன் மொபைலிலிருந்து ஒரு குறுஞ்செய்தி நல்ல விதமாக வந்து சேர்ந்தது.
அதை வாசித்து விட்டு தூங்கிவிட்டேன். மறுநாள் காலை நான் விழித்து விட்டேன். என் மொபைல் விழிக்கவில்லை. முதலுதவி, இரண்டாவது உதவி, மூன்றாவது உதவி எல்லாம் செய்தும் பயனில்லை. என் பாசக்கார மொபைலின் முகத்தை (ஸ்கீரினை) சோகமாக உற்றுப் பார்த்தேன். ஏதோ எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்தது. வெளிச்சத்தில் வந்து பார்த்தேன். 'CONTACT SERVICE CENTER' என தன் மரண(!) வாக்குமூலத்தை எழுதிச் சென்றிருந்தது.
'சிம்'மாவது பிழைத்திருக்குமா என அறிய 'ரன்'னினேன். இன்னொரு மொபைலில் உயிர் பெற்று கண் சிமிட்டியது 'சிம்'.
அப்புறமென்ன 'கைப்பேசி பழுது நீக்கும் அகத்தில்' கொடுத்தேன். ஏதோ சாப்ட்வேர் பிரச்னை என்றார்கள். 500 ரூபாய் மருத்துவச் செலவில் அடுத்த பிறவி எடுத்தது என் மொபைல்.

"எச்சரிக்கை! உங்கள் மொபைலில் 'ACE' அல்லது 'XALAN' அல்லது 'UNAVAILBALE' என்ற பெயரில் அழைப்பு வந்தால் ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஏற்றுக் கொண்டால் IMEI (International Mobile Equipment Identity - அதாங்க *#06# என டைப்பினால் 15 இலக்க எண் வருமே! இந்த எண் மொபைலின் உற்பத்தியாளர், மாடல், உற்பத்தி செய்யப்பட்ட தேதி, நாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.) பாதிக்கப்படுமாம்! IMSIம் (International Mobile Subscriber Identity) பாதிக்கப்படுமாம்! உங்கள் மொபைலிலுள்ள, சிம்மிலுள்ள தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடுமாம்! இந்தத் தகவல் மோட்டரோலா, நோக்கியாவால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸால் அமெரிக்காவில் 3 மில்லியன் மொபைல்கள் செயலிழந்துள்ளன. இத்தகவலை CNN தளமும் உறுதி செய்கிறது." என இப்போது ஒரு fwd: மெயில் பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளது.

"இல்லவே இல்லை. 3 மில்லியன் மொபைல்கள் செயலிழந்திருந்தால் அது பெரிய செய்தியாக வெளி வந்திருக்கும். இதுவரை அப்படி செய்திகள் வந்ததாகத் தெரியவில்லை. CNN தளத்திலும் இது பற்றிய எந்தத் தகவலும் இல்லை" என டேட்டா காட்டுகிறது இந்தச் சுட்டி!

'ஓகே.. ஓகே.. fwd: மெயில்ல இதெல்லாம் சகஜமப்பா'ன்னு சொல்லுறீங்களா.. அதுவும் உண்மைதான்.

சரி மொபைல் வைரஸைத் தடுக்க என்ன பண்ணலாம்? நமக்கு வேண்டப்பட்ட எண்களை கண்டிப்பா save பண்ணி வைச்சிருப்போம்! அவங்க கூப்பிட்டால் கண்டிப்பா போன்ல இருக்கிற அவங்க பேரு வந்திரும். அது தவிர வேற எந்தப் பெயரிலும் அழைப்பு வந்தாலோ, குறுஞ்செய்தி வந்தாலோ ஏற்றுக் கொள்ளாமல் விடுவதே பாதுகாப்பானது. (ACE, XALAN, UNAVAILABLE -இந்தப் பெயர்களில் யாருடைய எண்ணையும் பதிவு செய்து வைத்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்!)

வசதிப்பட்டால் இந்தச் சுட்டிக்குப் போய் மொபைலுக்கு ஆன்ட்டி-வைரஸ் வாங்கிப் போட்டுக்கோங்க!

உங்களூக்குத் தெரிந்த யோசனைகள் வரவேற்கப்படுகின்றன!

Monday, August 01, 2005

காதல்...

காதல் வாஸ்து பார்த்து வர்ற வஸ்து இல்ல...
காதல் - 'படக்'னு பூக்குற முள் இது...
Image hosted by Photobucket.com
காதல் எமகண்டத்துல கூட வரும். தெற்கே சூலமாயிருந்தாலும், மனசை நிர்மூலமாக்குற உணர்வு!
காதல் வந்தால் சோறு இறங்காது. பீஸாகூட பிடிக்காது!
.......................
இப்படி பல காதலாளிகள் - பலவிதமா சொல்லியிருக்காங்க!
ஆனா கந்த சஷ்டி கவசத்தை சொல்லுற மாதிரி காதலை சொல்லுறது ஈஸி கிடையாதே...

என்ன பண்ணலாம்.... க்ளிக்குக!