தமிழ் முகில்

Wednesday, August 03, 2005

மொபைல் போன் வைரஸ்... சில தகவல்கள்!

வைரஸ் காய்ச்சல் முதலில் உயிரினங்களுக்கு மட்டும் வந்தது.
பின் கணினி மேல் கண் வைக்கத் தொடங்கியது.
இப்போது மொபைல் போன்களையும் முத்தமிட ஆரம்பித்துள்ளது.
Image hosted by Photobucket.com


ஒருநாள் அதிகாலை 2 மணி இருக்கும். சிங்கப்பூரில் இருந்து என் நண்பன் மொபைலிலிருந்து ஒரு குறுஞ்செய்தி நல்ல விதமாக வந்து சேர்ந்தது.
அதை வாசித்து விட்டு தூங்கிவிட்டேன். மறுநாள் காலை நான் விழித்து விட்டேன். என் மொபைல் விழிக்கவில்லை. முதலுதவி, இரண்டாவது உதவி, மூன்றாவது உதவி எல்லாம் செய்தும் பயனில்லை. என் பாசக்கார மொபைலின் முகத்தை (ஸ்கீரினை) சோகமாக உற்றுப் பார்த்தேன். ஏதோ எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்தது. வெளிச்சத்தில் வந்து பார்த்தேன். 'CONTACT SERVICE CENTER' என தன் மரண(!) வாக்குமூலத்தை எழுதிச் சென்றிருந்தது.
'சிம்'மாவது பிழைத்திருக்குமா என அறிய 'ரன்'னினேன். இன்னொரு மொபைலில் உயிர் பெற்று கண் சிமிட்டியது 'சிம்'.
அப்புறமென்ன 'கைப்பேசி பழுது நீக்கும் அகத்தில்' கொடுத்தேன். ஏதோ சாப்ட்வேர் பிரச்னை என்றார்கள். 500 ரூபாய் மருத்துவச் செலவில் அடுத்த பிறவி எடுத்தது என் மொபைல்.

"எச்சரிக்கை! உங்கள் மொபைலில் 'ACE' அல்லது 'XALAN' அல்லது 'UNAVAILBALE' என்ற பெயரில் அழைப்பு வந்தால் ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஏற்றுக் கொண்டால் IMEI (International Mobile Equipment Identity - அதாங்க *#06# என டைப்பினால் 15 இலக்க எண் வருமே! இந்த எண் மொபைலின் உற்பத்தியாளர், மாடல், உற்பத்தி செய்யப்பட்ட தேதி, நாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.) பாதிக்கப்படுமாம்! IMSIம் (International Mobile Subscriber Identity) பாதிக்கப்படுமாம்! உங்கள் மொபைலிலுள்ள, சிம்மிலுள்ள தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடுமாம்! இந்தத் தகவல் மோட்டரோலா, நோக்கியாவால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸால் அமெரிக்காவில் 3 மில்லியன் மொபைல்கள் செயலிழந்துள்ளன. இத்தகவலை CNN தளமும் உறுதி செய்கிறது." என இப்போது ஒரு fwd: மெயில் பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளது.

"இல்லவே இல்லை. 3 மில்லியன் மொபைல்கள் செயலிழந்திருந்தால் அது பெரிய செய்தியாக வெளி வந்திருக்கும். இதுவரை அப்படி செய்திகள் வந்ததாகத் தெரியவில்லை. CNN தளத்திலும் இது பற்றிய எந்தத் தகவலும் இல்லை" என டேட்டா காட்டுகிறது இந்தச் சுட்டி!

'ஓகே.. ஓகே.. fwd: மெயில்ல இதெல்லாம் சகஜமப்பா'ன்னு சொல்லுறீங்களா.. அதுவும் உண்மைதான்.

சரி மொபைல் வைரஸைத் தடுக்க என்ன பண்ணலாம்? நமக்கு வேண்டப்பட்ட எண்களை கண்டிப்பா save பண்ணி வைச்சிருப்போம்! அவங்க கூப்பிட்டால் கண்டிப்பா போன்ல இருக்கிற அவங்க பேரு வந்திரும். அது தவிர வேற எந்தப் பெயரிலும் அழைப்பு வந்தாலோ, குறுஞ்செய்தி வந்தாலோ ஏற்றுக் கொள்ளாமல் விடுவதே பாதுகாப்பானது. (ACE, XALAN, UNAVAILABLE -இந்தப் பெயர்களில் யாருடைய எண்ணையும் பதிவு செய்து வைத்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்!)

வசதிப்பட்டால் இந்தச் சுட்டிக்குப் போய் மொபைலுக்கு ஆன்ட்டி-வைரஸ் வாங்கிப் போட்டுக்கோங்க!

உங்களூக்குத் தெரிந்த யோசனைகள் வரவேற்கப்படுகின்றன!

0 Comments:

Post a Comment

<< Home