தமிழ் முகில்

Wednesday, February 22, 2006

பார்த்துச் சிரிக்க ரெண்டு விஷயங்கள்!

நேற்றும் இன்றும்!
















இந்தியத் திரைப்படம் ஒன்று!

Saturday, February 11, 2006

தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர்...

தழிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் தெரியுமா.. அது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். தமிழ்நாட்டின் வருங்கால முதல்வராக ஒருவருக்கு வளமான வாய்ப்பை பலரும் ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். யாரவர்?

ரஜினி... சான்ஸே இல்லை.

விஜயகாந்த்... தெரியவில்லை.

கார்த்திக்
விஜய்
அஜித்சிம்பு
தனுஷ்
வடிவேலு... ஹிஹி!

ஸ்டாலின்
தொல்.திருமாவளவன்
ராமதாஸ்
கிருஷ்ணசாமி.... ஐடியா இல்லீங்க!

இவர்கள் எல்லோரையும் தாண்டி,
புகழின் ஏணியில்,
மீடியாக்களின் ஒட்டு மொத்த கவனிப்பில்
வளர்ந்து வரும்
தானைத் தலைவி
குஷ்பு -வே
தங்கத் தமிழகத்தின்
வருங்கால முதல்வர் நாற்காலியில் அமர
தன் தகுதியை வளர்த்துக் கொண்டு வருகிறார்.
நெசம்தானே?!

Tuesday, January 03, 2006

சந்திரபாபுவின் நெகிழ்ச்சியூட்டும் வாழ்க்கை

கண்ணீரும் புன்னகையும் - நிகரற்ற நகைச்சுவைக் கலைஞர் சந்திரபாபுவின் நெகிழ்ச்சியூட்டும் வாழ்க்கை!
இது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளிவரவிருக்கும் எனது புத்தகம். வெளியீடு : கிழக்கு பதிப்பகம்.
சந்திரபாபு என்ற மனிதர் வாழ்ந்த ரசனையான, ரகளையான, ரணமான வாழ்க்கை பற்றிய ஒரு தொகுப்பு இந்நூல்.
இந்தப் புத்தகத்துக்குப் பின் எனது மூன்று மாத உழைப்பு இருக்கிறது. சந்திரபாபுவின் வாழ்க்கையைத் தேடி புத்தகமாக்க முயன்றபோது கிடைத்த அனுபவங்களைக் கொண்டு 'Making of Chandrababu' என்றொரு தனிப் புத்தகமே எழுதலாம். புத்தகத்தில் சந்திரபாபுவே சொல்வது போல் அமைந்துள்ள ஒரு கட்டுரையின் சிறு பகுதி முன்னோட்டமாய் உங்களுக்காக...



************
என் உள்ளத்தில் புரையோடிப் போயிருக்கும் புண்ணை நான் கீறப் போகிறேன்.
எதிரில் இருப்பது முள்வேலி என்றறிந்தும் அதன் மேல் சாய்ந்தேனே, என் உடல் என்ன ஆயிற்று என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டாமா?அதைத்தான் சொல்லப் போகிறேன்.ஏன் இவ்வளவு காலதாமதம் என்று கேட்கறீர்களா! காரணத்தைச் சொல்கிறேன்.
'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்பது தமிழ் மொழி அல்லவா, அதனால்தான் பொறுத்து வந்தேன்.'பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு' என்பதும் தமிழ் மொழியாக இருக்கின்ற காரணத்தால் இன்று நான் உண்மையைச் சொல்லப் போகிறேன்.
பல லட்சங்களுக்கு அதிபதியான நான், இன்று சில நூறு நோட்டுக்களையே பார்க்கக் கூடிய அளவிற்கு மாறிய கதையை நீங்கள் உணர வேண்டாமா!
நான் மக்கள் திலகமல்ல...இன்று வைக்கப்படும் திலகம் நாளை அழிக்கப்பட்டு விடுகிறதே! நான் உங்கள் உள்ளத்தில் இருப்பவன். அதனால் உண்மையைச் சொல்கிறேன்.கதாசிரியராக, வசனகர்த்தாவாக, டைரக்டராக, தயாரிப்பாளராக நான் மாறிய கதையும், முடிவில் புரொடக்ஷன் மேனேஜர் நிலைக்கு வந்த கதையும் இதில் அடங்கும்.
எரிமலைகளே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் வெப்பத்தை ஒரு நேரத்தில் அடக்க முடியாமல் வெடித்து கக்கி விடுகிறதே.. இந்த பாபு சாதாரண மனிதன் தானே! மனதிற்குள் போட்டு பூட்டி வைத்து அது சீழ் பிடித்து, ரணமாகி என்னை எத்தனை துன்பப்படுத்தி விட்டது. நான் உங்களிடம் அதைக் கொட்டி மனவேதனையை ஓரளவு குறைத்துக் கொண்டிருக்கிறேன்.
அது மட்டுமல்ல.. என் சுயசரிதம் பல வழிகளில் பலருக்குத் துணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் ஒரு காரணம்தான். சுயசரிதம் என்பது என்ன? வாழ்க்கையில் உயர்நிலை அடைந்த பலர் பொய்யும்- புனை சுருட்டுமாக இன்று ஏதோ எழுதுகிறார்களே.. அதுவா சுயசரிதம். நாம் தாழ்ந்த நிலையில் இருந்தோம் அதைச் சொன்னால் இன்றைய உயர்ந்த வாழ்க்கைக்கு அது இழிவாகப் படுமே என்றெண்ணி, அதை மறைத்து, பிறக்கும் போதே மோதிரம், செயினுடன் பிறந்ததாக போலி வேடம் போட எனக்குத் தெரியவில்லையே..
பாபு நல்லவன்.. வெகுளி.. என்ற பட்டங்கள் எனக்குண்டு. அதை என்றென்றும் காப்பாற்றிக் கொள்ள விரும்புகிறேன். அதனால் உண்மைகளைச் சொல்கிறேன்.
*************

Thursday, December 29, 2005

என்ன புத்தகம், கண்டுபிடியுங்க?

மனத்தில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத காரணத்தாலேயெ தமிழ் சினிமா உலகம் புறக்கணித்த மிகப்பெரிய கலைஞர் இவர்.
மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின் திரையுலகுக்கு வந்த இவர், மிகக் குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு இறந்துபோனவர். தமது சொந்த வாழ்க்கையின் ஆறாத சோகங்களை மறைத்துக் கொண்டு மக்களைச் சிரிக்கவைத்த மகத்தான கலைஞர். சற்றும் நம்பமுடியாத அதிரடிக் கருத்துக்களை அடிக்கடி வெளியிட்டு, திரைத் துறையினரை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கியவர்.


எனது அடுத்த பற்றிய மேலும் சில குறிப்புகள்தான் இவை.யாருன்னு கண்டுபிடிச்சிருப்பீங்களே?!

விடை - புத்தக முகப்பு அட்டையுடன் - விரைவில்!

Tuesday, December 27, 2005

என்ன புத்தகம்? கண்டுபிடியுங்க!

அடுத்த புத்தகத்தை எழுதி முடிச்சுட்டேன். புத்தகம் தற்போது அச்சகத்தில் மையம் கொண்டு இருக்கிறது. சென்னை புத்தகக் காட்சியில் தாக்கும் என எதிர்பார்க்கிறேன். என்ன புத்தகம்? ஒரு சரிதை. வெளியீடு : கிழக்கு பதிப்பகம்.
யார்? என்ன புத்தகம்? சில குறிப்புகள் தருகிறேன். பதில் சொல்லுங்கள். ஏற்கனவே இதைப் பற்றித் தெரிந்த நண்பர்கள் (ரஜினி ராம்கி, ஐகாரஸ் பிரகாஸ், க்ருபா சங்கர், சுவடு ஷங்கர்+++) பதில் சொல்ல வேண்டாம். மற்றவர்கள் முயற்சி செய்யவும்.

* நடிகர்.. (நல்ல நடிகர்)
* பாடகர்.. (சிறந்த பாடகர்)
* இறந்து விட்டார்.
* அவர் தன்னைப் பற்றி செய்து கொண்ட சுயவிமர்சனம் இதுதான்.

"என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை.
என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. சிரிப்பை அடக்குவதற்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது"

என்ன... யாருன்னு தெரியுதா?
பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.

Monday, December 26, 2005

எச்சரிக்கை

Monday, December 19, 2005

மெய்யாலுமா?

பாகிஸ்தான்ல இப்படித்தான் அதைத் தயாரிக்காங்களாம்.. எதை? எனக்கு வந்த ஃபார்வர்டு மெயிலை அப்படியே கண்காட்சிப் படுத்தியிருக்கேன். ஒரு தபா வந்து பாருங்க..

1. கடையில ப்ரௌன் கலர் பானம் வாங்கி..


2. பழைய பெப்ஸி பாட்டிலை கழுவி..

3. ட்ரேயில வரிசையா அடுக்கி..

4. புனலை வைச்சு ஊத்தி..


5. 'gas' நிரப்பி..


6. பிராண்ட் மூடியை எடுத்து...

7. பெர்ஃபக்டா பொருத்திட்டா, மேட்டர் ரெடி!


மெய்யாலுமா? இப்படித்தான் நடக்குதா?